பயோ பபுளில் உள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் 8 அணியின் வீரர்களும் அவரவர் வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதனால், ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஐபிஎல் நிர்வாகமும், பிசிசிஐயும் மேற்கொண்டு வருகின்றன. 

Advertisement

இந்நிலையில்தான் தோனி எடுத்துள்ள முடிவு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பத்திரமாக கிளம்பிய பிறகே தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து கிளம்புவேன் என தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில்“நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து கேப்டன் தோனி கடைசியாக வெளியேறும் சென்னை அணியின் உறுப்பினராக இருப்பார் என எங்களிடம் அவரே தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்ததால் முதலில் அணியில் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் முதலில் செல்வார்கள் என சொல்லி உள்ளார். 

அதன் பின்னர் இந்தியாவை சேர்ந்த வீரர்களும். பின்னர் நாங்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டுக்கு திரும்பினோம் என்ற செய்தியை அறிந்துக் கொண்டதும் தோனி ஹோட்டலில் இருந்து புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News