2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக ரிஸ்வான் தேர்வு!

Updated: Sun, Jan 23 2022 17:34 IST
ICC Names Pakistan Opener Mohammad Rizwan T20 Cricketer Of The Year 2021 (Image Source: Google)

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 2021-ஐ ஆட்சி செய்திருக்கிறார். 29 போட்டிகளில் விளையாடிய ரிஸ்வான் 1,326 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 73.66. ஸ்டிரைக் ரேட் 134.89. பேட்டிங் மட்டுமில்லாது கீப்பிங்கிலும் ரிஸ்வான் அசத்தியுள்ளார்.

சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2021-இன் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார் ரிஸ்வான். அதில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 3ஆவது இடம் பிடித்தார். 

2021 தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இதன்பிறகு, கராச்சியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 87 ரன்கள் விளாசினார். டி20 உலகக் கோப்பையில் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை