ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

Advertisement

இந்த நிலையில், 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போஸ்டரை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து அணிகளின் கேப்டன் படங்களையும் ஐசிசி பதிவிட்டுள்ளது. ஆனால் அதில் இந்திய அணியை குறிக்கும் விதமாக விராட் கோலியின் புகைப்படத்தை போட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், ஐசிசி இன்னும் விராட் கோலி தான் கேப்டன் என்பது போல் சித்தரித்து இருப்பதாக ரோஹித் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

இதற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி ரசிகர்கள், அணியின் ஸ்டார் வீரர்களை மட்டும் தான் ஐசிசி போஸ்டரில் வெளியிட்டுள்ளதாகவும், விராட் கோலி தான் ஸ்டார் என்பதால் அவர் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகவும் விமர்சித்துள்ளனர். இதனால் யார் ஸ்டார் வீரர் என்று இரு வீரர்களின் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News