ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைகின்றன. இதில் இன்று நடைபெற்ற 44ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் டேவிட் மாலன் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 59 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவும் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணியும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 84 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 60 ரன்களுக்கு ஜோ ரூட்டும் ஆட்டமிழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 30 ரன்களையும், கேப்டன் ஜோஸ் படர் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாஹின் அஃப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News