ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Advertisement

அதேசமயம் மீதமுள்ள இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம்  - மதியம் 2 மணி (GMT 0830)

பிட்ச் ரிப்போர்ட்

வான்கடே மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி 399, 382 ரன்கள் அடித்து நொறுக்கி வெற்றி கண்டது. இங்குள்ள பிட்ச் இப்போட்டியிலும் ஃபிளாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பேட்ஸ்மேன்கள் சிறிய பவுண்டரிகளை பயன்படுத்தி நங்கூரமாக நின்றால் பெரிய ரன்களை எளிதாக அடிக்கலாம். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • ஆஸ்திரேலியா - 03
  • ஆஃப்கானிஸ்தான் - 00
Advertisement

உத்தேச லெவன் 

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ரஹ்மத் ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், இப்ராஹிம் ஸத்ரான்
  • ஆல்ரவுண்டர் - அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள்- மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா (துணை கேப்டன்), ரஷித் கான்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News