ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!

Updated: Sun, Aug 08 2021 20:42 IST
ICC Player of the Month: Shakib, Mitchell Marsh highlight July nominations (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர். 

அதன்படி ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதுக்கான வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிந்துரைத்துள்ளது.

அதன்படி ஆடவருக்கான பட்டியலில் வங்கதேசத்திலிருந்து ஷகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவிலிருந்து மிட்செல் மார்ஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹேடன் வால்ஷ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் மகளிர் கிரிக்கெட்டிலிருந்து ஹேலே மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ஃபாதிமா சனா (பாகிஸ்தான்) மற்றும் ஸ்டெஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை