ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சர்வதேச டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் பில் சால்ட் இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து வருகின்றனர். 

Advertisement

அதேசமயம் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்திற்கு, முகமது ரிஸ்வான் ஒரு இடம் பின் தங்கி 04ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இரண்டு இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிராவிஸ் ஹெட் 06 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும், ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 08 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும் பிடித்துளனர். 

Advertisement

அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளனர். இதில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் முதலிடத்திலும், இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா இரண்டாம் இடத்திலும் நீடித்து வரும் நிலையில், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கானும், 4ஆம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆன்ரிச் நோர்ட்ஜேவும், 5ஆம் இடத்தில் ஃபசல்ஹக் ஃபரூக்கியும் இடம்பிடித்துள்ளனர். 

இதில் ரஷித் கான் மற்றும் ஆன்ரிச் நோர்ட்ஜே தலா 4 இடங்களும், ஃபசல்ஹக் ஃபரூக்கி 06 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார். இந்த பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து வரும் அக்ஸர் படேல் 04 இடங்கள் பின் தங்கி 07ஆம் இடத்திற்கும், ரவி பிஷ்னோய் 06 இடங்கள் பின் தங்கி 10ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர்த்து வேறெந்த இந்திய பந்துவீச்சாளர்களும் டாப் 10 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐசிசியின் ஆடவர் டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி ஆஃப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் முகமது நபி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

அவரைப் பொலவே நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆல் ரவுண்டராக அசத்திவரும் ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 03 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா 03ஆம் இடத்திற்கும், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரஸா 04ஆம் இடத்திலும், வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 05ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் இந்திய அணியைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியா 08ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News