ஐசிசி தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய கிங் கோலி!

Updated: Wed, Apr 07 2021 15:04 IST
Image Source: Google

தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 

பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.

இப்பட்டியலில் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் நான்காவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் ஐந்தாவது இடத்திலும் நீடித்து வருகின்றனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், தென்ஆப்பிரிக்க அணியின் காகிசோ ரபாடா 669 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 690 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இதியில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 9ஆவது இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை