டி20 தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளிய ராகுல்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடாத கேஎல் ராகுல் , நமிபியா, ஸ்காட்லாந்து, ஆப்கன் ஆகிய 3 அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டிய்லை வெளியிட்டுள்ளது. இதில் 727 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு கேஎல்.ராகுல் முன்னேறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அரைசதம் அடித்த விராட் கோலி, அதன்பின் நடந்த போட்டிகளில் சொதப்பியதால், 698 புள்ளிகளுடன் 8ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் மார்க்ரம், தரவரிசையில் 796 புள்ளிகளுடன் 3ஆஅவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வேன் டெர் டூசென் முதல் முறையாக பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 10ஆஅவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஸம்ப்பா 5ஆவது இடத்திலும், ஹேசல்வுட் 8ஆவது இடத்துக்கும் நகர்ந்தனர். மிகப்பெரிய முன்னேற்றமாக நியூசிலாந்தின் டிம் சவுதி 9ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல் 3 இடங்கள் நகர்ந்து 4ஆவது இடத்துக்கும், மிட்ஷெல் மார்ஷ் 9ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.