‘ஷுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்திருந்தால்..’ - பத்ரிநாத் தாக்கு!

Updated: Tue, Jan 07 2025 11:46 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விரர் ஷுப்மன் கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாமல் இருந்த ஷுப்மன் கில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடினார். பின்னார் பாக்ஸிங் டேஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். 

அதன்பிறகு, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் அவர் அணிக்குத் திரும்பினார். ஆனால் அந்தப் போட்டியிலும் அவரால் பேட்டிங்கில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இத்தொடரின் மொத்தமாக ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 18.60 சராசரியில் 93 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேற்கொண்டு சமீப காலமாகவே ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்த கேள்வியானது அதிகரித்து வந்த நிலையில், தற்போது இத்தொடரிலும் அவர் சோபிக்க தவறியுள்ளார். 

இந்நிலையில், தொடர்ந்து மோசமாக விளையாடிம் வரும் ஷுப்மன் கில்லிற்கு ஏன் இவ்வளவு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்றும், அவர் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்தால் இவ்வளவு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்றும் முன்னாள் வீரர் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய பத்ரிநாத், “ஒருவேளை ஷுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்திருந்தால் எப்பவோ அணியிலிருந்து வெளியேற்றி இருப்பார்கள். ஏனெனில் அவர் ஒரு பேட்டராக அணிக்கு எந்த உதவியும் செய்வதில்லை.

நீங்கள் ரன்கள் அடிக்கவேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் குறைந்தபட்சம் அதிகநேரம் களத்தில் நின்று பந்துகளை பழையதாக்கவோ, பவுலர்களை சோர்வாக்கவோ உதவவேண்டும். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவர் இதை எதையுமே செய்யவில்லை. மேலும் அவருடைய ஃபீல்டிங்கும் சிறப்பாக இல்லை. அவர் இந்திய அணிக்கு எந்த வகையில் உதவுகிறார் என்ற கேள்வி அனைவரது மத்திலும் எழுத்தொடங்கியுள்ளது” என்று விமர்சித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணிக்காக 2019ஆம் ஆண்டு அறிமுகமான ஷுப்மன் கில் இதுநாள் வரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதம், 7 அரைசதங்களுடன் 1893 ரன்களையும், 47 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதம் 13 அரைசதங்கள் என 2328 ரன்களையும், 21 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் 3 அரைசதங்கள் என 578 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு சமீபத்திய தொடர்களில் அவர் அணியின் துணைக்கேப்டனாகவும் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை