பென் ஸ்டோக்ஸுக்கு உருக்கமான மெசேஜ் கொடுத்த ஜோ ரூட்!

Updated: Thu, Apr 28 2022 22:30 IST
'I’ll be Right With You Every Step of the Way': Joe Root Congratulates Ben Stokes With a Heartwarmin (Image Source: Google)

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்த ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்தது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.

ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி  மட்டுமே பெற்றது. தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் அண்மையில் விலகினார். 

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் என்று நேற்றே தகவல் வெளியான நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்துள்ளார் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். அந்த டுவீட்டில், “நாம் இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆதரவாக இருந்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.. எப்போதுமே உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை