ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்படும் ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வைப்பர்ஸ் அணிக்கு கேப்டன் காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியாக தொடங்கினர். இதில் ஹேல்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 22 ரன்களில் முன்ரோவும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸும் 19 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ஆடம் ஹோஸ் - வநிந்து ஹசரங்கா இணை ஓரளவு நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் ஹசரங்கா 24 ரன்களிலும், ரூதர்ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும், பாஸ் டி லீட் 14 ரன்களோடும் என விக்கெட்டை இழக்க, மறுபுறம் அரைசதத்தை நெருங்கிய ஆடம் ஹோஸ் 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் அலிகான் 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் அலிஷன் ஷஷாஃபு ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஆண்ட்ரிஸ் கொஸ் - மைக்கேல் பெப்பர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். 

அதன்பின் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கட்ட கொஸ் 36 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சாம் ஹைன் ஒரு ரன்னிலும், லௌரி எவான்ஸ் 21 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரிஸ் கொஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்களை விளாசி 95 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

இதன்மூலம் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஆண்ட்ரிஸ் கொஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News