ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் - துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாம் பாண்டன் - மேக்ஸ் ஹோல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவுண்டரிகளாக விளாசி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஹோல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Advertisement

பின் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ் ஹோல்டன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் பாண்டனும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய லூயிஸ் டு ப்ளூய் 17 ரன்களுக்கும், கேப்டன் சாம் பில்லிங்ஸ் 6 ரன்களுக்கும், கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சிக்கந்தர் ரஸா ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டங்க், தசுன் ஷனகா, ஸ்காட் குகெலீஜ்ன், ஒல்லி ஸ்டோன் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. எமிரேட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய விஜயகாந்த் வியாஸ்காந்த், டேன் மௌஸ்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதைனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தலா 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ஃபிளெட்சர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கிறிஸ் பெஞ்சமின் ஒரு ரன்னிலும், டேன் மௌஸ்லி 2 ரன்களிலும், கேப்டன் கீரேன் பொல்லார்ட் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ஃபிளெட்சர் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர்.

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டுகளையும், ஸஹிர் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஐஎல்டி20 லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News