ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேமி ஸ்மித் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் ஒரு ரன்னிலும், ஜோர்டன் காக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடந்து களமிறங்கிய ஜெரால்ட் எராஸ்மஸும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

Advertisement

பின்னர் இணைந்த ஜேம்ஸ் வின்ஸ் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அயான் அஃப்சல் கான் 10 ரன்களோடு நடையைக் கட்டினார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிம்ரான் ஹெட்மையரும் 34 ரன்களில் தனது விக்கெட்ட  இழந்தார். 

இறுதியில் டோனிமிக் டிரேக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஒல்லி ஸ்டோன் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் குகெலீஜ்ன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையடைய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 11 ரன்களுக்கும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய பென் டங்க் 13, சாம் பில்லிங்ஸ் 12, மேக்ஸ் ஹோல்டன் 7, சிக்கந்தர் ரஸா 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய தசுன் ஷனகா ஒரு முறையில் அணியின் வெற்றிக்காக போராட, மறுபக்கம் களமிறங்கிய ஸ்காட் ஒரு ரன்னிலும், ஒல்லி ஸ்டோன் 5 ரன்களுக்கும், அகிஃப் ராஜா ஒரு ரன்னிலும், ஹைதர் அலி 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 24 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அவரால் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க முடியவில்லை.

Advertisement

இதனால் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அயான் அஃப்சல் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்ரினர். இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News