ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஆடம் லித் ஒரு ரன்னிலும், ரெஹான் அஹ்மத் 4 ரன்னிலும், ஜோர்டன் காக்ஸ் ஒரு ரன்னிலும், ஒல்லி ராபின்சன் ரன்கள் ஏதுமின்றியும், ஷிம்ரான் ஹெட்மையர், மார்க் அதிர், அயான் கான் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வந்த நிலையில் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

அதுமட்டுமின்றி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேம்ஸ் வின்ஸ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே சேர்த்தது. வைப்பர்ஸ் தரப்பில் லோக்கி ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய வைப்பர்ஸ் அணியில் ஃபகர் ஸமான் 7 ரன்களுக்கும், டேனியல் லாரன்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் சாம் கரண் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அலெக்ஸ் ஹேல் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய அசாம் கானும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினர். இதனையடுத்து சாம் கரணுடன் இணைந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் அதிரடியாக விளையாட அணியின் வெற்றியும் உறுதியானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் கரண் 42 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூத்ரஃபோர்ட் 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News