ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - எம் ஐ எமீரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற எமீரேட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி பேட்டிங் செய்த அபுதாபி அணியில் பிராண்டன் கிங், கென்னர் லூயிஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ரெய்ஃபெர், அசலங்கா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் என அடுத்தடுத்து கனிசமான ரன்களில் ஆட்டமிழந்தனர். 

Advertisement

இருப்பினும் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தனஞ்செய டி சில்வா அதிரடியாக விளையடை அரைசதம் கடந்து அசத்தினார். பின் அவரும் 65 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய எம்ஐ எமீரேட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் வில் ஸ்மீத், முகமது வாசீம் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே ஃபிளெட்சர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். நிக்கோலஸ் பூரன் 20 ரன்களிலும், கீரென் பொல்லார்ட் 31  ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் அரைசதத்தைப் பூர்த்தி செய்த ஆண்ட்ரே ஃபிளெட்சர் 53 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஸத்ரான் - டுவைன் பிராவோ அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் எம் ஐ எமீரேட்ஸ் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News