ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு குசால் பெரேரா - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் வசீமுடன் இணைந்த ஆண்ட்ரே ஃபிளெட்சரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் வசீம் 19 ரன்களிலும், ஆண்ட்ரே ஃபிளட்செ 18 ரன்களும் எடுத்த நிலையில் லுக் வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அம்பத்தி ராயுடு தனது பங்கிற்கு 23 ரன்களையும், அகீல் ஹொசைன் 24 ரன்களையும் எடுத்த நிலையில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் டிம் டேவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 28 ரன்களைச் சேர்த்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது அமீர் 3 விக்கெட்டுகளையும், லுக் வுட், மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி விளையடாவுள்ளது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பார்ஸ் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - ரோஹன் முஸ்தஃபா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ரோஹன் முஸ்தஃபா 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸ் 3 ரன்களிலும், கேப்டன் காலின் முன்ரோ 4 ரன்களுக்கும், ஆடம் ஹோஸ் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் இணைந்த வநிந்து ஹசரங்கா - அசாம் கான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அசாம் கான் 20 ரன்களுக்கும், வநிந்து ஹசரங்கா 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அலி நெசர் 14 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரூதர்ஃபோர்ட் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க ஆட்டத்தின் பரபரப்பும் கூடியது. 

Advertisement

இதனால் கடைசி ஓவரில் டெஸ்ர்ட் அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி 17 ரன்களையும், லுக் வுட் 6 ரன்களையும் சேர்த்து கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது அமிர் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News