ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதைனையடுத்து களமிறங்கிய கேப்டவுன் அணியிக்கு குசால் பெரேரா - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குசால் பெரேரா 4 ரன்னிலும், முகமது வசீம் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய டாம் பான்டன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுமுனையில் விளையாடிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 8 ரன்களுக்கும், டேன் மௌஸ்லி 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 57 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதன்பின் பன்டனுடன் இணைந்த கீரென் பொல்லார்ட் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் பான்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 56 ரன்கைளில் பான்டனும், கீரன் பொல்லார்ட் 34 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் அகீல் ஹொசைன் 20 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் டேனியல் வோரல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ் ஒரு ரன்னிலும், ஜோர்டன் காக்ஸ் 9 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டால் அல்சப் - எராஸ்மஸ் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அல்சப் 32 ரன்களுக்கும், எராஸ்மஸ் 37 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.  அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் 11 ரன்னிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 7 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து டாம் கரண் 16 மற்றும் மார்க் அதிர் 15 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் அயான் அஃப்சல் கான் 11 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மார்க் அதீர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News