ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைனையடுத்து களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கொஹ்லார் காட்மோர் 9 ரன்களுக்கும், ஜான்சன் சார்லஸ் 4 ரன்னிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றியும், முஸ்தஃபா 2 ரன்னிலும், டிம் செய்ஃபெர்ட் 9 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஜேசன் ராய் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் விளையாடிய வெல்ஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் களமிறங்கிய கேப்டன் டிம் சௌதீ 7 ரன்னிலும், ஆடம் மில்னே 4 ரன்களுக்கும் ஆட்டமிழக்க ஷார்ஜா வாரியர்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ராய் 30 ரன்களைச் சேர்த்திருந்தார். டெஸர்ட் வைப்பர்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது அமீர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஃபகர் ஸமான் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் அபாரமாக விளையாடி வந்த ஃபகர் ஸமான் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 71 ரன்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியானது 10 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது அமீர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News