ஐஎல்டி20: ஷனகா, ரஸா அதிரடியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Mon, Feb 06 2023 10:52 IST
ILT20: Shanaka, Sikandar Raza Steer Dubai Capitals To Victory Over MI Emirates (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதலாவதூ சீசன் ஐஎல்டி20 லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்ட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 9, பாஸ் டி லீட் 2 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான முகமது வாசீம் 31 ரன்களிலும், லோர்கன் டக்கர் 21 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - மௌஸ்லி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பூரன் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஜேக் பால் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஜார்ஜ் முன்ஸி 14 ரன்களிலும், ராபின் உத்தப்பா 29 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் ரன் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த தசுன் ஷனகா - சிக்கந்தர் ரஸா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது.

இறுதியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷன்கா 58 ரன்களுடனும், சிக்கந்தர் ரஸா 56 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை