ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sat, Jan 28 2023 22:47 IST
Image Source: Google

ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் ஜோ கிளார்க் 7 ரன்களிலும், தனஞ்செயா டி சில்வா 18 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான பால் ஸ்டிர்லிங் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 28 பந்துகளில் 3 சிக்சர்ஸ், ஒரு பவுண்டரி என 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தடு.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் கொஹ்லர், ஜோ டென்லி, மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஹோஸ் பால் வால்க்கர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார். அதன்பின் 39 பந்துகளில் 56 ரன்களைச் சேர்த்த குர்பாஸ் ஆட்டமிழந்தார்.

இருதியில் முகமது நபி, நூர் அஹ்மத் இருவரும் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நடை ரைடர்ஸ் அணியையை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு உதவியாக இருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை