ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. 

Advertisement

இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 44 ரன்கள்யும், நசீம் ஷா 40 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைபற்றினர். 

Advertisement

அதன் பின்னர் 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜோஷ் இங்கில்ஸ் 49 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பட் கம்மின்ஸ் 32 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 33.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. 

இப்போட்டியில் போராடி தோல்வியை தழுவியது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான், “எந்த சூழ்நிலை வந்தாலும் முயற்சியை கைவிடாமல் அணியின் வெற்றிக்காக போராட முடிவு செய்தோம். இதுபோன்ற கடினமான போட்டி குறித்து நீங்கள் ஏதும் விமர்சிக்க முடியாது. இந்த மைதானத்தில் விளையாடுவது மிகவும் காடினம். அதனால் முடிவானது கடவுளின் கையில் தான் உள்ளது. 

ஆனாலும் இப்போட்டியில் நாங்கள் இறுதிவரை தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் போராடியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த போட்டியில் நாங்கள் விக்கெட் கீப்பிங் செய்வதிலும், ஃபீல்டிங்கை மற்றுவதிலும் பிஸியாக இருந்தேன். இரு அணிகளின் பந்து வீச்சாளர்களுக்கும் எனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு ஒவ்வொரு முறையும் நாங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இப்போட்டியில் ஹாரிஸ் ரவூஃப் நன்றாக பந்து வீசினார். மேலும் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது நாங்கள் ஒரு பந்துவீச்சு குழுவாக 5 அல்லது 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சித்தோம். ஆனால் இன்றைய தினம் அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவுடன் இருந்தது, அதனால் அவர்கள் வெற்றி பெற்றனர்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News