கேப்டன் பொறுப்பை ஏற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - நாட் ஸ்கைவர் பிரண்ட்!

Updated: Wed, Apr 30 2025 22:20 IST
Image Source: Google

இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன் ஆஷஸ் தொடரையும் இழந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி மீது விமர்சனங்களும் அதிகரித்தது.

இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் லூயிஸ் விலகுவதாக அறிவித்த நிலையில், அவரைத்தொடர்ந்து இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக கிட்டத்திட்ட 9ஆண்டுகளாக வழிநடத்தி வந்த ஹீதர் நைட்டும் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஹீதர் நைட், 199 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார்.

இதில் அவர் 134 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார். இதுதவிர்த்து 6 உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி, மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும், அதில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் அவரது தலைமையில் இங்கிலாந்தின் செயல்திறன் ஏமாற்றமளித்தது

இதன் காரணமாக அவர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து மகளிர் அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மகளிர் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக இவர் இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வந்தார். 

கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான நாட் ஸ்கைவர் பிரண்ட் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 12 டெஸ்ட், 115 ஒருநாள் மற்றும் 132 டி20 போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 43 அரைசதங்கள் என 7ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 181 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதுதவிர்த்து அவர் இங்கிலாந்து அணியின் கேப்டனாக 11 போட்டிகளில் செயல்பட்டு அதில் 9 வெற்றிகளையும் பெற்றுள்ளார். 

இந்நிலையில் கேப்டன் பதவி குறித்து பேசிய நாட் ஸ்கைவர் பிரண்ட், “இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த 2013 ஆம் ஆண்டு நான் இங்கிலாந்து அணியில் அறிமுகமானதிலிருந்து, என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் அணிக்கு உதவ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

Also Read: LIVE Cricket Score

எங்களிடம் உண்மையிலேயே திறமையான குழு உள்ளது, மேலும் எங்களிடம் ஒன்றுபட்ட குழு உள்ளது. இது நான் நம்பும் ஒரு அணி, ஒன்றாக நிறைய வெற்றிகளைப் பெறக்கூடிய ஒரு அணி. மும்பை இந்தியன்ஸில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்த சார்லட்டுடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. கிரிக்கெட் மீதான அவரது அன்பும் இங்கிலாந்து மகளிர் அணி மீதான அவரது ஆர்வமும் ஊக்கமளிக்கிறது, மேலும் இந்த கூட்டாண்மை எங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க நான் ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை