சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரானது லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.

Advertisement

இதில் நேற்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அம்பத்தி ராயுடு 5 ரன்னிலும், பவன் நெகி 14  ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் - யுவராஜ் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 42 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யுவராஜ் சிங் அரைசதம் கடந்த நிலையில் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து கையோடு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஸ்டூவர்ட் பின்னி 36 ரன்களையும், யூசுப் பதான் 23 ரன்களையும், இர்ஃபான் பதான் 19 ரன்களையும் சேர்க்க இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் தோஹர்த்தி, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் ஷேன் வாட்சன் 5 ரன்னிலும், ஷான் மார்ஷ் 21 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் 2 ரன்னிலும், பென் டங்க் 21 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த நாதன் ரியர்டன் - பென் கட்டிங் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ரியர்டன் 21 ரன்னில் ஆட்டமிழக்க, பென் கட்டிங்கும் 39 ரன்களில் நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சேவியர் தோஹர்த்தி 10 ரன்களை எடுத்திருந்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 18.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்தியா மாஸ்டர்ஸ் தரப்பில் ஷபாஸ் நதீம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News