IN-W vs AU-W, 3rd ODI, Cricket Tips:  எதிர்வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

Advertisement

தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால், எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

IN-W vs AU-W: Match Details

  • மோதும் அணிகள்: இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
  • இடம்: அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
  • நேரம் - இந்திய நேரப்படி மதியம் 1 மணி

IN-W vs AU-W: Live Streaming Details

Advertisement

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கில் நேரலையில் காண முடியும். ஆன்லைனின் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ - ஹாட்ஸ்டாரில் இந்த தொடரை காண முடியும்,

IN-W vs AU-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 58
  • India Women: 11
  • Australia Women: 47
  • No Result/Tied: 0

IN-W vs AU-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 33 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 16 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 16 முறையும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. மேலும் இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி 239 ரன்களாகவும், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 428 ரன்களாகவும் உள்ளன. 

IN-W vs AU-W: Possible XIs

India Women: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ராதா யாதவ், தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், கிராந்தி கௌர், ஸ்ரீ சரணி

Australia Women: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அலிசா ஹீலி (கேப்டன்), எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்lலே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், கிம் கார்த், மேகன் ஸ்காட்.

Advertisement

IN-W vs AU-W 3rd ODI: Player to Watch Out For

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கலாம். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் அலிசா ஹீலி, ஆலிஸ் பெர்ரி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் மற்றும் அலகா கிங் ஆகியோர் தங்கள் செயல்திறனால் போட்டியை மற்ற முடியும். 

Today Match Prediction: இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி வலிமையானதாக பார்க்கப்படுவதால், இந்த போட்டியிலும் அதனை தொடர வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score
Advertisement

IN-W vs AU-W 3rd ODI Prediction, Today Match IN-W vs AU-W, IN-W vs AU-W Prediction, Injury Update of the match between India Women vs Australia Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News