India Women vs Australia Women Dream11 Prediction, T20 World Cup 2024:  ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியானது விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அதேசமயம் இந்திய அணியானது இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

IND W vs AUS W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.13 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

IND W vs AUS W T20I Pitch Report

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர்ர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 56 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 முறையும், சேஸிங் செய்த அணி 24 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

IND W vs AUS W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 34
  • இந்திய மகளிர் அணி - 07
  • ஆஸ்திரேலியா மகளிர் அணி - 25
  • முடிவில்லை - 02
Advertisement

IND W vs AUS W T20I Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

India Women vs Australia Women Probable Playing XI

Advertisement

இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா, சஜீவன் சஜனா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ரேணுகா சிங்.

ஆஸ்திரேலியா மகளிர் அணி: பெத் மூனி, அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரேஸ் ஹாரிஸ், ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், தஹ்லியா மெக்ராத், அன்னாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ், மேகன் ஸ்கட்.

IND W vs AUS W T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ்
  • பேட்ஸ்மேன்கள்- எலிஸ் பெர்ரி, ஸ்மிருதி மந்தனா 
  • ஆல்-ரவுண்டர்கள் - தீப்தி சர்மா (துணை கேப்டன்), அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - மேகன் ஷட், சோஃபி மோலினக்ஸ், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர்
Advertisement

IND W vs AUS W T20I Dream11 Prediction, IND W vs AUS W Dream11 Team, Fantasy  Cricket Tips, IND W vs AUS W Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs Australia Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News