IN-W vs NZ-W 3rd ODIDream11 Prediction நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

IN-W vs NZ-W 3rd ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs  நியூசிலாந்து மகளிர்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - அக்.29 மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

IN-W vs NZ-W: Ground Pitch Report

இந்திய மகளிர் vs  நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 35 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 18 முறையும், சேஸிங் செய்த அணி 17 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 237 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 365 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

IN-W vs NZ-W: Head-to-Head in ODIs

  • மோதிய போட்டிகள் - 56
  • இந்திய மகளிர் அணி - 21
  • நியூசிலாந்து மகளிர் அணி - 24
  • முடிவில்லை - 01

IN-W vs NZ-W: Live Streaming Details

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 19 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி நேரலையில் காணலாம்.

India Women vs New Zealand Women Probable Playing XI

Advertisement

இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), யாஸ்திகா பாட்டியா, தேஜல் ஹசாப்னிஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, சைமா தாகூர், பிரியா மிஸ்ரா.

நியூசிலாந்து மகளிர் அணி: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா பிலிம்மர், லாரன் டவுன், ப்ரூக் ஹாலிடே, சோஃபி டெவின் (சி), இசபெல்லா கேஸ் (வாரம்), மேடி கிரீன், ஜெஸ் கெர், லியா தஹுஹு, ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ்

IN-W vs NZ-W 3rd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - யஷ்திகா பாட்டியா
  • பேட்டர்ஸ் - ஜார்ஜியா பிளிம்மர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - சோஃபி டிவைன் (துணைக்கேப்டன்), தீப்தி சர்மா (துணைக்கேப்ட), சூஸி பேட்ஸ், ஹர்மன்பிரீத் கவுர்
  • பந்துவீச்சாளர்கள் - ராதா யாதவ், ஈடன் கார்சன், ஜெஸ் கெர்

IN-W vs NZ-W 3rd ODI Dream11 Prediction, Today Match IN-W vs NZ-W, IN-W vs NZ-W Dream11 Team, Fantasy Cricket Tips, IN-W vs NZ-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the New Zealand Women tour of India 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News