IN-W vs PK-W Match 7, ICC Women's T20 World Cup 2024Dream11 Prediction: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இரு அணிகள் உலகக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

IN-W vs PK-W : Match Detail: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs  பாகிஸ்தான் மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.07 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

IN-W vs PK-W: Ground Pitch Report

Advertisement

இந்திய மகளிர் vs  பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 99 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 47 முறையும், சேஸிங் செய்த அணி 51 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 141 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

IN-W vs PK-W: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 15
  • இந்திய மகளிர் அணி - 12
  • பாகிஸ்தான் மகளிர் அணி - 03
  • முடிவில்லை - 00

IN-W vs PK-W: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

India Women vs New Zealand Women Probable Playing XI

இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்.

Advertisement

பாகிஸ்தான் மகளிர் அணி: குல் ஃபெரோசா, முனீபா அலி, அலியா ரியாஸ், நிதா தார், பாத்திமா சனா (கே), சித்ரா அமின், ஒமைமா சோஹைல், துபா ஹாசன், நஷ்ரா சந்து, டயானா பெய்க், சாடியா இக்பால்

IN-W vs PK-W: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ், முனீபா அலி
  • பேட்டர்ஸ் - ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர்
  • ஆல்-ரவுண்டர்கள் - நிதா தார், ஃபத்திமா சனா (துணைக்கேப்டன்), ஒமைமா சோஹைல், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரேகர்
  • பந்துவீச்சாளர்கள் - சதியா இக்பால், ரேணுகா சிங்

IN-W vs PK-W Match 7 Dream11 Prediction, Today Match IN-W vs PK-W, IN-W vs PK-W Dream11 Team, Bangladesh women vs England women, Fantasy Cricket Tips, IN-W vs PK-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ICC Women's T20 World Cup 2024

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News