India Women vs West Indies Women 1st ODI Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது தொடங்கவுள்ளது. 

Advertisement

அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வியை சந்தித்த கையோடு இந்த ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது. இருப்பினும் டி20 தொடரை வென்ற உத்வேகத்தினால் இந்த தொடரையும் வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மறுபக்கம் டி20 தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

IN-W vs WI-W 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • நேரம்: டிசம்பர் 22, இரவு 1.30 மணி
  • இடம்: கோடாம்பி மைதானம், வதோதரா

IN-W vs WI-W 1st ODI Pitch Report

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை எந்தவொரு சர்வதேச போட்டிகளும் நடைபெற்றாதில்லை. அதனால் இந்த மைதானம் எவ்வாறு செயல்படும், மைதானத்தின் தன்மை மற்றும் மைதானம் யாருக்கு அதிக சாதகத்தை வழங்கும் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.  

IN-W vs WI-W 1st ODI: Where to Watch?

Advertisement

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

IN-W vs WI-W ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 26
  • இந்திய மகளிர் - 21
  • வெஸ்ட் இண்டீஸ் மகளிர் - 05

IN-W vs WI-W ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ரிச்சா கோஷ்
  • பேட்டர்கள் - ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கியானா ஜோசப்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), டியான்ட்ரா டோட்டின், தீப்தி சர்மா (துணை கேப்டன்), மின்னு மணி
  • பந்து வீச்சாளர்கள் - அஃபி ஃபிளெட்சர், ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது
Advertisement

India Women vs West Indies Women 1st ODI Probable Playing XI

India 1st ODI Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, மின்னு மணி, சைமா தாகூர், டிடாஸ் சாது, பிரியா மிஸ்ரா, ரேணுகா சிங் தாக்கூர்.

West Indies 1st ODI Probable Playing XI : ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), கியானா ஜோசப், ஷமைன் கேம்ப்பெல், டியான்ட்ரா டோட்டின், சினெல்லே ஹென்றி, ஷபிகா கசன்பி, நெரிசா கிராப்டன், அஃபி ஃபிளெட்சர், கரிஷ்மா ராம்ஹரெக், ஷாமிலியா கானல்.

Advertisement

IN-W vs WI-W 1st ODI Dream11 Prediction, IN-W vs WI-W Dream11 Prediction, Today Match IN-W vs WI-W, IN-W vs WI-W ODI Series, IN-W vs WI-W Dream11 Team, Fantasy Cricket Tips, IN-W vs WI-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs West Indies Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News