India Women vs West Indies Women 2nd T20 Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ர கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியானது ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தொடரை சமன்செய்யவும் ஆர்வம் காட்டும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

IN-W vs WI-W 2nd T20: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • நேரம்: டிசம்பர் 17, இரவு 7 மணி
  • இடம்: டிஒய் பாட்டில் மைதானம், நவி மும்பை

IN-W vs WI-W 2nd T20 Pitch Report

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது நவி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 6 டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், அதில் 4 முறை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 155 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசாரி 157 ரன்களாகவும் உள்ளது. மேலும் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 187 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IN-W vs WI-W 2nd T20: Where to Watch?

Advertisement

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

IN-W vs WI-W T20 Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 22
  • இந்திய மகளிர் - 14
  • வெஸ்ட் இண்டீஸ் மகளி - 08

IN-W vs WI-W 2nd T20 Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஷமைன் கேம்ப்பெல், ரிச்சா கோஷ்
  • பேட்டர்கள் - ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), டியான்ட்ரா டோட்டின், தீப்தி சர்மா (துணை கேப்டன்), சினெல்லே ஹென்றி
  • பந்து வீச்சாளர்கள் - அஃபி ஃபிளெட்சர், ரேணுகா சிங் தாக்கூர்.
Advertisement

India Women vs West Indies Women 2nd T20 Probable Playing XI

India 1st 2nd Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா, உமா செத்ரி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ரிச்சா கோஷ், சஜீவன் சஜனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், சைமா தாக்கூர், டைட்டாஸ் சாது, ரேணுகா தாக்கூர் சிங்

West Indies 2nd T20 Probable Playing XI : ஹீலி மேத்யூஸ்(கே), கியானா ஜோசப், ஷெமைன் காம்பெல், டியாண்ட்ரா டோட்டின், சினெல்லே ஹென்றி, ஷபிகா கஜ்னபி, அஃபி ஃபிளெட்சர், ஜைடா ஜேம்ஸ், மாண்டி மங்ரு, கரிஷ்மா ராம்ஹராக், ஷமிலியா கானல்
 
IN-W vs WI-W 2nd T20 Dream11 Prediction, IN-W vs WI-W Dream11 Prediction, Today Match IN-W vs WI-W, IN-W vs WI-W T20 Series, IN-W vs WI-W Dream11 Team, Fantasy Cricket Tips, IN-W vs WI-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs West Indies Women

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News