IND A vs AUS A 1st Test: இமலாய ரன்னை குவித்த ஆஸ்திரேலியா ஏ; இந்திய ஏ அணி தடுமாற்றம்!
IND A vs AUS A 1st Test: இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 532 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நேற்று லக்னோவில் தொட்ங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.
மற்றொரு தொடக்க வீரரான காம்பெல் கெல்லவேவும் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்களைச் சேர்த்தது. இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை லியாம் ஸ்காட் 47 ரன்களுட்னும், ஜோஷ் பிலீப் 3 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் லியாம் ஸ்காட் 81 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஜோஷ் பிலீப் சதமடித்து அசத்தியதுடன் 18 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 123 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 532 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் - நாராயண் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அபிமன்யூ ஈஸ்வரன் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம், மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஜெகதீசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அடுத்து வந்த சாய் சுதர்ஷனும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.
Also Read: LIVE Cricket Score
இதனால், இரண்டாம் நாள் ஆட்டம் முன் கூட்டியே முடிவடைந்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜெகதீசன் 50 ரன்களுடனும், சாய் சுதர்ஷன் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 416 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய ஏ அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.