அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா புதிய முயற்சி!

Updated: Fri, Feb 03 2023 18:23 IST
IND V AUS: Aussies Rope In 'Ashwin Duplicate', Spin-friendly Tracks To Train For Test Series (Image Source: Google)

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, நாக்பூர், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத் ஆகிய 4 மைதானங்களில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணி பெங்களூருவில் பயிற்சி முகாம் அமைத்தது ஏன் என்று பலரும் யோசித்து வந்தனர். அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.

பெங்களூருவை அடுத்த ஆலுர் என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஆடுகளங்கள் அனைத்தும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். இந்திய வீரர்கள் யாராவது சுழற்பந்துவீச்சுக்கு தயாராக வேண்டும் என்றால், இங்கு வந்து தான் பயிற்சி செய்வார்களாம். ஆர்சிபி அணி நிர்வாகமும், இங்கு பலமுறை பயிற்சி செய்து இருக்கிறார்கள்.

இந்த ரகசியத்தை ஆர்சிபி மூலம் தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள், எங்களுக்கு பெங்களூருவில் இந்த மைதானம் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார்கள். மேலும் இந்தியாவில் தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தை தவிர எந்த ஒரு வீரரும் டெஸ்ட் போட்டியில் 30க்கு மேல் சராசரி வைத்தது இல்லை.

இதனாலேயே சுழற்பந்துவீச்சுக்கு தயாராக, வலைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போன்று தமிழக வீரர் அஸ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலை அளிப்பார். அந்த அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்டை வீழ்த்துவது அஸ்வினுக்கு சுலபம் என்பதால், அதனை சமாளிக்கவும் ஆஸ்திரேலியா திட்டம் தீட்டியுள்ளது.

அதில், அஸ்வினை போலலே பந்துவீசும் பரோடாவை சேர்ந்த இந்திய வீரர் மகீஷ் பித்தையா. இதன் காரணமாக அவரை 4 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க அழைத்துள்ள ஆஸ்திரேலிய அணி, அஸ்வினை போலவே பந்துவீச சொல்லி, அதனை எதிர்கொண்டு பழகி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் கடந்த 18 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஆனால் இந்திய அணியோ, ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2 டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. இதனால் இம்முறை கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள ஆஸ்திரேலிய அணி, கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை