ஆஸ்திரேலியா தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஆலன் பார்டர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டவது டெஸ்ட் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்று கடைசி இன்னிங்சில் வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 90 நிமிடங்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 113 ரன்களில் ஆஸ்திரேலியா சுருண்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை ஆடி தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தங்களது அணி பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “இரண்டு நாட்களுக்கு உங்களுடைய ரேடியோக்கள் செய்தித்தாள்களை எல்லாம் மூடி வைத்து விடுங்கள்.
உங்களுடைய நண்பர்களிடம் பேசுங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்று பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் ஏற்கனவே இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி பேசி இருப்பார்கள். ஆனால் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் யுத்திகள் குறித்து நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். ஸ்வீப் ஷாட்களை ஆடி ரன்கள் எடுப்பது சரியான முறை கிடையாது.
முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவஜா சிறப்பாக விளையாடினார்.அவர் ரிவர்ஸ் குறிப்புகளை சிறப்பாக கையாண்டார்.ஆனால் பந்தின் பவுன்ஸ் குறைய தொடங்கினால் ஸ்விப் ஷாட் ஆடுவது மிகவும் அபாயகரமானது. எனவே நீங்கள் ஒரு மாற்றுத்திட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் 15 20 ரன்கள் எடுக்கும் போது தான் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அதன் பிறகு ஆடுகளத்தின் தன்மையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
உங்களுக்கு களத்தின் சூழல் புரிந்து விடும். ரன்கள் அடிப்பது பிறகு எளிதாகிவிடும். ஆஸ்திரேலிய வீரர்களை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இது கடினமான வேலை. இப்போது நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். இதுபோன்ற பந்துவீச்சை எதிர்கொள்வது சுலபம் கிடையாது. இதற்கு நீங்கள் எப்படி விடை கண்டுபிடிக்கப் போகிறீர்கள் என்று எனக்கும் தெரியவில்லை” என கூறியுள்ளார்.