IND vs AUS, 4th Test: ஷுப்மன் கில் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா!

Updated: Sat, Mar 11 2023 11:49 IST
IND VS AUS, 4th Test: India Lost First Wicket On Day 3, Kuhnemann Hunts Rohit Sharma! (Image Source: Google)

பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை இழந்திருந்தது. 

அதன்பின் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் இருவரும் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இரண்டாவது நாள் ஆட்டத்தை முடித்தது இந்தியா. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் சுப்மண் கில் 18 ரன்கள்டனும் தொடர்ந்தன்ர். 

இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கில்லுடன் இணைந்த புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், செட்டேஷ்வர் புஜாரா 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் குன்னமேன் ஒரு விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து 351 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை