சர்ச்சைகுள்ளான விராட் கோலியின் ஆட்டமிழப்பு; கடுப்பில் ரசிகர்கள்!

Updated: Sat, Feb 18 2023 15:46 IST
Image Source: Google

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று தொடரில் முன்னிலை வகித்து இருக்கிறது .

இந்த நிலையில் நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதற்கு அடுத்து விளையாடு வரும் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் எல்லோரும் ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருக்க ஒரு முனையில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த விராட் கோலி இடது கை வேகம் பந்துவீச்சாளர் குன்னமேன் வீசிய பந்தை தடுத்து விளையாட முற்பட்ட பொழுது பந்து கால் காப்பில் பட்ட மாதிரி தெரிய, பந்துவீச்சாளர் அவுட் அப்பில் கேட்க அம்பயர் நிதின் மேனன் அவுட் கொடுத்தார்.

இதை அடுத்து விராட் கோலி மூன்றாவது அம்பயரிடம் செல்ல பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் கால் காப்பு இரண்டிலும் பட்ட மாதிரியே தெரிந்தது. மூன்றாவது நடுவர் பலமுறை சோதித்த பின்பு இறுதியில் அவுட் என தீர்ப்பளித்தார். இதில் மேலும் துயரமாக பந்து பாதி அளவு கூட ஸ்டெம்பில் படவில்லை. அம்பயரின் முடிவால் விராட் கோலி வெளியேற வேண்டியதாக போய்விட்டது. மிகவும் நெருக்கடியான நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு இந்திய அணியை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டது.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை