நான் எனது பந்துவீச்சில் மகிழ்ச்சி அடைகிறேன் - ரவீந்திர ஜடேஜா!

Updated: Thu, Feb 09 2023 19:53 IST
Image Source: Google

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் ஆரம்பித்து இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் லபுசேன் அதிகபட்சமாக 49 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 37 ரன்கள் எடுத்தார்கள். 63.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 

இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடும், அறுவை சிகிச்சை முடிந்து வந்திருக்கும் ரவீந்திர ஜடேஜா 22 ஓவர்கள் பந்து வீசி எட்டு மெய்டனங்கள் செய்து 47 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதற்கடுத்து விளையாடிய இந்திய அணி கே எல் ராகுல் விக்கெட்டை அவர் 20 ரன்கள் எடுத்திருந்தபொழுது விட்டு ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருக்கிறது. ரோஹித் சர்மா 56 ரன்கள் உடனும், அஸ்வின் ரன் ஏதும் இல்லாமலும் களத்தில் இருக்கிறார்கள்.

இன்றைய நாள் முடிவுக்குப் பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா, “நான் எனது பந்துவீச்சில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் என்னுடைய பந்துவீச்சை அனுபவித்து வீசுகிறேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கடினமானது. என்சிஏ-வில் என் உடற்தகுதி மற்றும் என் திறமை ஆகியவற்றில் கடுமையாக உழைத்தேன். நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடி 42 ஓவர்கள் வீசினேன். இங்கு வந்து டெஸ்ட் விளையாடியது எனது நம்பிக்கையை அதிகரித்தது .

இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் இல்லை. பந்து திரும்பியது நேராக சென்றது. எனவே நான் ஸ்டெம்ப் டு ஸ்டெம்ப் பந்து வீசுவதை என் இலக்காக வைத்துக் கொண்டேன். நீங்கள் ஒரு இடது கை சுழற் பந்து வீச்சாளராக இருக்கும்பொழுது, ஒரு விக்கட்டை பின்புறம் கேட்ச் ஆக, ஸ்டெம்பிங் ஆக எடுக்கும் பொழுது அதற்கான கிரெடிட்டை பந்துக்கு கொடுத்து விட வேண்டும். 

அதேபோல் எந்த விக்கெட்டை எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்தாலும் அது மகிழ்ச்சி அடையக் கூடியதுதான். பெங்களூரு என்சிஏ- வில் இருந்த பொழுது நான் தினமும் 10 முதல் 12 மணி நேரங்கள் பந்துவீசி பயிற்சி செய்தேன். நான் நீண்ட ஸ்பெல்களை வீச வேண்டும் என்று தெரிந்திருந்தால் நான் எனது ரிதத்தில் பயிற்சி செய்தேன். அது இப்போது எனக்கு மிக உதவியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை