இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த வாசீம் ஜாஃபர்!

Updated: Thu, Mar 09 2023 12:48 IST
IND vs AUS: Wasim Jaffer hopeful of India making comeback in fourth Test! (Image Source: Google)

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.

இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சற்று சொதப்பலாக இருந்தது. 75 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்து ஒன்பது விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனவே இந்த முறை கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், “இந்திய அணி இரண்டு தவறுகளை செய்து வருகிறது. ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் தடுமாறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மான் கில் ஆகியோர் இன்னும் தெளிவாக ஆட வேண்டும். அப்போதுதான் பவுலர்களுக்கு உதவி கிடைக்கும். குறிப்பாக விராட் கோலி ஃபார்மை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும்.

இதே போல அக்சர் பட்டேலை தவறாக பயன்படுத்துகின்றனர். எந்தவித அழுத்தமும் இன்றி ஆடும் அவரை கடந்த போட்டியில் ஒன்பதாவது இடத்தில் களம் இறக்கினர். இதனால் கடைசி வரை களத்தில் இருந்தும் பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. எனவே அஸ்வின், பரத்திற்கு முன்பாக அக்சரை களமிறக்க வேண்டும்” என வசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். எனவே ஆஸ்திரேலியா உடன் இருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை