India vs Bangladesh 1st Test, Dream11 Prediction: வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை முதல் நடைபெறவுள்ளது. அதன்படி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ததுடன் டெஸ்ட் தொடரையும் வென்று சாதனை படைத்த கையோடு, இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இந்திய அணியோ இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதாலும் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

IND vs BAN, 1st TestMatch Details

  • மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - செப்டம்பர் 19, காலை 9.30 மணி

IND vs BAN, 1st Test Live Streaming Details

Advertisement

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை ஸ்பொர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காண முடியும்.

IND vs BAN: Head-to-Head In T20Is

  • மோதிய போட்டிகள் - 13
  • இந்திய அணி - 11
  • வங்கதேசம் - 0
  • முடிவில்லை - 02
Advertisement

IND vs BAN: Pitch Report

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உலகின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் மைதானங்களில் ஒன்றாகும். மேலும் இங்கு பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறினாலும், களத்தில் நின்று விளையாடும் பேட்டரகளாலும் ரன்களை குவிக்க முடியும். அதேசமயம் பந்து பழையதாக சுழற்பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

India and Bangladesh Possible XIs

இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

வங்கதேசம்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், நஹித் ராணா, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத்.

IND vs BAN, 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: லிட்டன் தாஸ், ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, முஷ்பிகுர் ரஹீம், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), ஷகிப் அல் ஹசன்
  • பந்துவீச்சாளர்: ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்
Advertisement

IND vs BAN 1st Test Dream11 Prediction, Today Match IND vs BAN, IND vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News