India vs Bangladesh 2nd Test, Dream11 Prediction: வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றுவருகிறது.

Advertisement

இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவே வெற்றிபெற்ற கையோடும், வங்கதேச அணி தோல்வியைச் சந்தித்த கையோடும் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

ND vs BAN, 2nd TestMatch Details

  • மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம்
  • இடம் - கிரீன் பார்க் மைதானம், கான்பூர்
  • நேரம் - செப்டம்பர் 27, காலை 9.30 மணி

IND vs BAN, 2nd Test Live Streaming Details

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை ஸ்பொர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காண முடியும்.

IND vs BAN: Head-to-Head In T20Is

  • மோதிய போட்டிகள் - 14
  • இந்திய அணி - 12
  • வங்கதேசம் - 0
  • முடிவில்லை - 02

IND vs BAN: Pitch Report

Advertisement

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதனத்தில் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, இதில் 7 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், மூன்று முறை முதலில் பந்துவீசிய அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 370 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-இலங்கை இடையே நடந்த போட்டியில் 676 ரன்கள் எடுத்ததே இங்கு அடிக்கபட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

India vs Bangladesh 2nd Test Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ்/ஆகாஷ்தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வங்கதேசம் உத்தேச லெவன்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹதி ஹசன், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ரனா.

IND vs BAN, 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: லிட்டன் தாஸ், ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ்: விராட் கோலி முஷ்பிகுர் ரஹீம், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), ஷகிப் அல் ஹசன்
  • பந்துவீச்சாளர்: ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்
Advertisement

IND vs BAN 2nd Test Dream11 Prediction, IND vs BAN Dream11 Prediction, Today Match IND vs BAN, IND vs BAN Test Series, IND vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News