India vs Bangladesh Dream11 Prediction, T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் குரூப் 1-இல் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி ஆஃப்கானை வீழ்த்தி வெற்றியுடனும், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த கையுடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது. 

Advertisement

IND vs BAN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம்
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஜூன் 22, இரவு 8 மணி
Advertisement

IND vs BAN Pitch Report

ஆண்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மித வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 125 ரன்களாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிகளவு வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IND vs BAN T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 13
  • இந்தியா - 12
  • வங்கதேசம் - 01

IND vs BAN: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

India vs Bangladesh Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

Advertisement

வங்கதேசம் உத்தேச லெவன்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ரிஷாத் ஹுசைன், தாவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், மெஹ்தி ஹசன், தஸ்கின் அகமது, தன்சீம் ஹசன் ஷகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

IND vs BAN T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், லிட்டன் தாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், தாவ்ஹித் ஹிரிடோய்
  • ஆல்ரவுண்டர் - ஷகிப் அல் ஹசன், ஹர்திக் பாண்டியா, ரிஷாத் உசேன்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.

IND vs BAN Dream11 Prediction,  T20 World Cup 2024, Today Match IND vs BAN, IND vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs BAN Pitch Report, Today   Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Bangladesh

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News