அடுத்தடுத்து அபாரமான கேட்ச்சுகளை பிடித்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய ரோஹித், சிராஜ் - வைரல் காணொளி!

Updated: Mon, Sep 30 2024 12:55 IST
Image Source: Google

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஷாத்மான் இஸ்லாம் 24 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களிலும் என அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற இருந்த இப்போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் தொடர் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டியானாது மீண்டும் நடைபெறுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியது.  இந்நிலையில் இன்றைய தினம் இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது.

அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி தரப்பில் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 6 ரன்களுடன் க்ளமிறங்கியனர். இதில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய் லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தானர். அதேசமயம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 13ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

இதன்மூலம் 4ஆம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இதில் மொமினுல் ஹக் 102 ரன்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் முகமது சிராஜ் இவரும் பிடித்த அபாரமான கேட்சுகள் குறித்த காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அதன்படி வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் வீசிய 50ஆவது ஓவரின் 4ஆவது பந்தை இறங்கிவந்து அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்தை கவர் திசையை நோக்கி தூக்கி அடிக்க முயன்ற லிட்டன் தாஸ் அதனை சரியாக டைமிங் செய்ய தவறினார். அப்போது 30 யார்ட் வட்டத்திற்குள் அத்திசையில் ஃபீல்டிங்க் செய்துகொண்டிருந்த ரோஹித் சர்மா தாவி ஒற்றைக்கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் களமிறங்கிய வங்கதேச அணியின் அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இருந்தார். அப்போது இன்னிங்ஸின் 56ஆவது ஓவரை வீசிய அஸ்வின் பந்துவீச்சில் கடைசி பந்தை ஷாகிப் அல் ஹசன் தூக்கி அடிக்க முயற்சித்தார். ஆனால் அதனை அவர் சரியாக விளையாடாத நிலையில், பந்து லாங் ஆஃப் திசையில் உயரச் சென்றது. அப்போது 30 யார்ட் வட்டத்திற்குள் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த முகமது சிராஜ் பின்னோக்கி ஓடியதுடன், அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை