India vs Canada, Match 33 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் ஏறத்தாழ எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் இந்திய அணியானது கனடா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கனடா அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

IND vs CAN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs கனடா
  • இடம் - சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானம், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூன் 15, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

IND vs CAN Pitch Report

இந்தப் போட்டி ஃபுளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு நடந்த டி20 சர்வதேச போட்டிகளில் பெரும்பாலானவற்றில் சேஸிங் செய்துள்ள அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 157 ரன்களாக உள்ளது. அதேசமயம் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 245 ரன்கள் உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் இங்கு நடைபெறும் போட்டிகளில் வானவேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என்பதை ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

IND vs CAN T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 00
  • இந்தியா - 00
  • கனடா - 00

IND vs CAN: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

India vs Canada Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Advertisement

கனடா உத்தேச லெவன்: ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால், பர்கத் சிங், தில்ப்ரீத் பஜ்வா, நிக்கோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மோவா, திலன் ஹெய்லிகர், சாத் பின் ஜாபர் (கேப்டன்), கலீம் சனா, ஜுனைத் சித்திக், ஜெர்மி கார்டன்.

IND vs CAN T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி, ஆரோன் ஜான்சன்
  • ஆல்-ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா, சாத் பின் ஜாபர், அக்ஸர் படேல், தில்லன் ஹெலிகர்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

IND vs CAN Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match IND vs CAN, IND vs CAN Dream11 Team, Fantasy  Cricket Tips, IND vs CAN Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Canada

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News