India vs England 1st ODI Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (பிப்ரவரி 6)முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Advertisement

IND vs ENG 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- இந்தியா vs இங்கிலாந்து
  • இடம் - விதர்பா கிரிக்கெட் சங்க மைதானம், நாக்பூர்
  • நேரம் - பிப்வரி 06, மதியம் 1.30 மணி

IND vs ENG 1st ODI Pitch Report

இப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு இதுவரை 11 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 8 முறையும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி 260 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்சமாக ரன்களாக 354 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும்.  இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IND vs ENG 1st ODI: Where to Watch?

Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

IND vs ENG T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 107
  • இந்தியா - 54
  • இங்கிலாந்து - 48
  • முடிவில்லை - 05

IND vs ENG 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (துணைக்கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ரோஹித் சர்மா
  • ஆல்ரவுண்டர் - ஹார்டிக் பாண்டியா, ஜோ ரூட்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன்
  • பந்து வீச்சாளர்கள் - ஜோஃப்ரா ஆர்ச்சர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
Advertisement

India vs England 1st ODI Probable Playing XI

India 1st ODI Probable Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்/கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா/வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி/ஹர்ஷித் ராணா.

England 1st ODI Probable Playing XI : பென் டக்கெட், பில் சால்ட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்.

Advertisement

IND vs ENG 1st ODI Dream11 Prediction, IND vs ENG Dream11 Prediction, Today Match IND vs ENG, IND vs ENG ODI Series, IND vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs ENG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs England

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News