இந்திய அணியின் எதிர்கால வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஷுப்மன் கில். தற்போது 23 வயது ஷுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்துக்கு முன்பு, 13 டெஸ்டுகள், 18 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக  விளையாடியுள்ளார். 

Advertisement

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 87 பந்துகளில் தனது 3ஆவது ஒருநாள் சதத்தை எடுத்தார் ஷுப்மன் கில். அத்துடன் நில்லாமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 145 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார்.

Advertisement

இன்று, 109 ரன்களை எடுத்தபோது 1000 ஒருநாள் ரன்களைப் பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில். இதன்மூலம் 18 இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ரன்களை எடுத்த ஷுப்மன் கில், இந்த இலக்கை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு, விராட் கோலி, 24 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்தார். 

மேலும் 1000 ரன்களை விரைவாக எடுத்த வீரர்களில் கில்லுக்கு 2ஆவது இடம். பாகிஸ்தானின் ஃபகார் ஸமான் 18 இன்னிங்ஸிலும் இமாம் உல் ஹக், கில் ஆகிய இருவரும் 19 இன்னிங்ஸிலும் இந்த இலக்கை அடைந்துள்ளார்கள்.

அதேபோல் குறைந்த வயதில் ஒருநாள் கிரிகெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் ஷுப்மன் கில் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மாதம் வங்கதேச தொடரின் போது இந்திய வீரர் இஷான் கிஷான் இரட்டை சதமடித்து, குறைந்த வயதில் இரட்டை சதமடித்த வீரர் எனும் சதனையை படைத்திருந்தார். தற்போது அதனை ஷுப்மன் கில் முறியடித்துள்ளார்.

மேலும் இந்திய அணி சார்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசும் ஐந்தாவது வீரர் எனும் பெருமையையும் ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News