இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. 

Advertisement

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான தொடக்கத்தையே அளித்தனர். தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமலே ஆட்டமிழந்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து வந்த பர்னெல் (24), மஹாராஜ் (41) ரன்கள் எடுக்க அணியின் ரன் விகிதம் சற்று அதிகரித்தது. எனினும் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியும் நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. ஆனால் இதில் கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதுமின்றியும், விராட் கோலி 3 ரன்களுடனும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - சூர்யகுமார் யாதவ் இணை இறுதிவரை விக்கெட் ஏதும் இழக்காமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

Advertisement

இதன்மூலம் இந்திய அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 51 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News