டி வில்லியச்ர்ஸை ஓவர்டெக் செய்தார் ரோஹித் சர்மா!

Updated: Sun, Jan 15 2023 16:34 IST
IND vs SL: Rohit Sharma Surpasses Ab de Villiers In ODI Run Scorer List (Image Source: Google)

இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்றது. இந்த நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற 8 போட்டியில் 5 முறை பேட்டிங் செய்த அணிகள் ஆல் அவுட் ஆனது.

மேலும் இந்திய அணி 3 சுழற்பந்தவீச்சாளர்களை வைத்து கொண்டு விளையாடுவதால், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதன் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் போல் 350 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா களமிறங்கியது.

பந்தின் பவுன்ஸ் குறைவாக இருந்தது. எனினும் பேட்டிங்கிற்கு எந்த நெருக்கடியும் இல்லை. இதன் காரணமாக, ரோகித், சுப்மான் ஜோடி முதலில் பொறுமையாக விளையாடி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து சுப்மான் கில், ரோகித் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ரன்கள் வேகமாக உயர்ந்தது.

குறிப்பாக ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் ரஜிதா வீசிய, அதன் கடைசி 3 பந்துகளில் ரோஹித் சர்மா 2 இமாலய சிக்சர்களையும், ஒரு பவுண்டரியும் அடித்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டிவில்லியர்சை ரோஹித் சர்மா முந்தினார். ஒரு கட்டத்திற்கு மேல் ரோஹித் சர்மா நன்றாக செட் ஆகி ஸ்விட் சாப்பிடுவது போல் ஷாட்களை அடினார்.

இதனால் இன்று ரோஹித் சர்மா பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 42 ரன்களில் கவனக்குறைவாக ரோஹித் சர்மா அடித்த ஷாட் நேரைடியாக பவுண்டரி லைனில் நின்ற ஃபில்டரிடம் கேட்ச் ஆனார். இதன் மூலம் பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பை ரோஹித் வீணடித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை