இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 93 ரன்களுக்கு, ருதுராஜ், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா ஆகிய 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

Advertisement

ஆனால் சூர்யகுமார் யாதவ் - வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரின் காட்டடி ஃபினிஷிங்கால் கடைசி 5 ஓவரில் 86 ரன்களை குவிக்க, 20 ஓவரில் இந்திய அணி 185 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார். 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களை விளாசினார். 

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப் ஆகியோர் தீபக் சஹாரின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அடுத்து வந்த ரோவ்மன் பாவலும் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கீரன் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - ரொமாரியா ஷெப்பர்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கையளித்தது. இதில் நிக்கோலஸ் பூரன் அரைசதம் கடந்தார்.

Advertisement

பின்னர் 61 ரன்கள் எடுத்திருந்த நிக்கோலஸ் பூரனை, ஷர்துல் தாக்கூர் வீழ்த்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வந்த ஷெப்பர்ட் 29 ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸின் தோல்வி உறுதியானது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News