IND vs WI: கரோனா தொற்றிலிருந்த மீண்ட ஷிகர், ஸ்ரேயாஸ்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷிகர் தவான்,ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி, அக்ஸர் படேல் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்துபட்டனர்.
இதனால அவர்களால் முதல் ஒருநாள் போட்டிக்கு அவர்களால் தேர்வாக முடியவில்லை. இந்நிலையில் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஆனாலும் அவர்களால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் தொற்றிலிருந்து மீண்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.