WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!

Updated: Tue, Jul 25 2023 13:05 IST
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றது. 

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதன்முலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும், ரோவ்மன் பவல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஷிம்ரன் ஹெட்மையர் அணிக்கு திரும்பி உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல், அலிக் அத்தானஸ், யானிக் கேரிஷ், கேசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மையர், அல்ஸாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோதி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியா ஷெப்ஃபெர்ட், கெவின் சின்க்ளேர், ஒஷேன் தாமஸ். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை