India Women vs UAE Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று முதல் இலங்கையில் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், யுஏஇ அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனாலும் யுஏஇ அணியை விட இந்திய அணி வலிமையானதாக பார்க்கப்படுவதால் நிச்சயம் இந்திய மகளிர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

IN-W vs UAE-W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs ஐக்கிய அரபு அமீரகம் மகளிர்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - ஜூலை 21, இரவு 2 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

IN-W vs UAE-W Pitch Report

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 7 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 159 ரன்கள். மேலும் இது பேட்டர்களுக்கு மிகவும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IN-W vs UAE-W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 01
  • இந்திய மகளிர் - 01
  • ஐக்கிய அரபு அமீரக மகளிர் - 00

India Women vs UAE Women Probable Playing XI

Advertisement

இந்திய மகளிர் உத்தேச லெவன்: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சஜீவன் சஜ்னா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ஸ்ரேயங்கா பாட்டீல்.

யுஏஇ மகளிர் உத்தேச லெவன்: இஷா ரோஹித் (கேப்டன்), தீர்த்த சதீஷ், ரினிதா ரஜித், சமைரா தரணிதர்கா, கவிஷா இகோடகே, குஷி ஷர்மா, லாவண்யா கெனி, வைஷ்ணவே மகேஷ், இந்துஜா நந்தகுமார், ஹீனா ஹாட்சந்தனி, ரித்திகா ரஜித்

IN-W vs UAE-W Dream11 Team

Advertisement

விக்கெட் கீப்பர் - தீர்த்த சதீஷ்
பேட்ஸ்மேன்கள் - ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தயாளன் ஹேமல்தா, ஷெபாலி வர்மா
ஆல்ரவுண்டர் - தீப்தி ஷர்மா (கேப்டன்), பூஜா வஸ்த்ரகர், கவிஷா இகோடகே, குஷி வர்மா
பந்துவீச்சாளர்கள் - ராதா யாதவ், ரேணுகா சர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல்.

IND-W vs UAE-W Dream11 Prediction, IND-W vs UAE-W T20I Dream11 Team, Fantasy  Cricket Tips, IND-W vs UAE-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs United Arab Emirates Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News